பங்களாதேஷ் தொழிற்சாலையில் தீ விபத்து: 52 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் தொழிற்சாலையில் தீ விபத்து: 52 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் தொழிற்சாலையில் தீ விபத்து: 52 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2021 | 4:15 pm

Colombo (News 1st) பங்களாதேஷில் உள்ள தொழிற்சாலையில் நேற்று (08) ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள ரூப்கஞ்சில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்திலிருந்து தப்பிக்க மேல் தளங்களில் இருந்து கீழே குதித்த பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சுமார் 24 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்