நாட்டிலுள்ள வௌிநாட்டவர்களின் விசாக்களுக்கான காலாவதி திகதி நீடிப்பு

நாட்டிலுள்ள வௌிநாட்டவர்களின் விசாக்களுக்கான காலாவதி திகதி நீடிப்பு

நாட்டிலுள்ள வௌிநாட்டவர்களின் விசாக்களுக்கான காலாவதி திகதி நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2021 | 2:44 pm

Colombo (News 1st) நாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வகையான விசாக்களுக்குமான காலாவதி திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (09) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரை விசாக்களுக்கான காலாவதி நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் காலாவதியாகும் விசாக்களுக்கான தண்டப்பணம் அறவிடப்படாத போதிலும், விசா கட்டணம் மாத்திரம் அறிவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வௌிநாட்டிற்கு செல்ல எதிர்பார்த்துள்ளோர், உரிய விசாவிற்கான கட்டணத்தை விமான நிலையத்தில் செலுத்திவிட்டு நாட்டிலிருந்து வௌியேற முடியும் அல்லது சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய, பயணக் கட்டுப்பாடுகளுக்கான ஆலோசனைகளை பின்பற்றி பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகத்திலும் விசாக்களை புதுப்பிக்க முடியும் என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்