தனிமைப்படுத்தலில் இருந்து தலைமன்னார் விடுவிப்பு

தனிமைப்படுத்தலில் இருந்து தலைமன்னார் விடுவிப்பு

by Staff Writer 09-07-2021 | 3:49 PM
Colombo (News 1st) அகலவத்த பொலிஸ் பிரிவில் கெக்குலந்தர - பிம்புற பகுதி இன்று காலை 6 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, தலைமன்னார் இறங்குத்துறை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். மாவனெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிம்புலஓய மற்றும் மஹவத்த ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.