ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திர சதுக்கத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திர சதுக்கத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2021 | 8:55 pm

Colombo (News 1st) அரசாங்கத்தின் ஒடுக்குமுறை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களை முன்நிறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திர சதுக்கத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பில் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து, சுதந்திர சதுக்கப் பகுதிக்கு அதிகளவான பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

நிலைமை தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்தினர்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்கும் மேலும் சில கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் வருகை தந்ததை அடுத்து, எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமானது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்