பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம்

by Chandrasekaram Chandravadani 08-07-2021 | 9:59 AM
Colombo (News 1st) பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பசில் ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது. இதனிடையே, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி முன்னலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.