துமிந்த நாகமுவ பொலிஸாரால் கைது

துமிந்த நாகமுவ பொலிஸாரால் கைது

by Staff Writer 07-07-2021 | 12:41 PM
Colombo (News 1st) முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - 02 இராமநாயக்க மாவத்தை பகுதியில் இன்று (07) காலை முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறாத போதும், சம்பவ இடத்திலிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலருடன் துமிந்த நாகமுவவும் இருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.