விசேட குழுவின் விசாரணை தொடர்ந்தும் முன்னெடுப்பு

திஸ்ஸமஹாராம வாவி விவகாரம்; விசேட குழுவின் விசாரணை தொடர்ந்தும் முன்னெடுப்பு

by Staff Writer 07-07-2021 | 8:35 AM
Colombo (News 1st) திஸ்ஸமஹாராம வாவியை தூர்வாருவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் விசேட குழுவினால் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விடயம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசியர் அநுர மனதுங்க குறிப்பிட்டார். தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியை பெறாத காரணத்தினால் திஸ்ஸமஹாராம வாவியை தூர்வாரும் செயற்பாடுகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. தொல்பொருள் சட்டம் மீறப்பட்டதை தவிர, இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை அணிந்து சீனப் பிரஜைகளும் அங்கு தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.