மேலும் 50,000 Sputnik V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

மேலும் 50,000 Sputnik V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

மேலும் 50,000 Sputnik V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2021 | 8:02 am

Colombo (News 1st) ரஷ்யாவின் 50,000 Sputnik V தடுப்பூசிகள் இன்று (07) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் Pfizer தடுப்பூசி இன்று முதல் நாட்டு மக்களுக்கு ஏற்றப்படவுள்ளது.

கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளில் வசிக்கும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Pfizer தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

AstraZeneca முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக Pfizer தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,

இதற்கமைய, இன்று (07) முதல் வௌ்ளவத்தை – ரொக்ஸி கார்ட்ன், மாளிகாவத்தை – பி.டி.சிறிசேன விளையாட்டரங்கு மற்றும் நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலைகளில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

தடுப்பூசி ஏற்றப்படும் தினம் மற்றும் இடம் என்பன குறுஞ்செய்தியூடாக அறிவிக்கப்படும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முதலாவதாக AstraZeneca தடுப்பூசி பெற்றுக் கொண்ட 80,000 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்