Colombo (News 1st) நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பிரதேசங்கள் இன்று (07) காலை 06 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில், நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் கிராம சேவகர் பிரிவின் நடுப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவின் கீழுள்ள நாகராஜ வலவ்வ பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.
