பிரபல நடிகர் திலீப் குமார் காலமானார்

பிரபல நடிகர் திலீப் குமார் காலமானார்

பிரபல நடிகர் திலீப் குமார் காலமானார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Jul, 2021 | 11:05 am

Colombo (News 1st) இந்தியாவின் பிரபல நடிகர் திலீப் குமார் (Dilip Kumar) காலமானார்.

உடல்நல குறைவால் தனது 98 ஆவது வயதில் மும்பையில் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 30 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இயற்கை எய்தியுள்ளார்.

1922 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பிறந்த திலீப் குமார், 1944 ஆம் ஆண்டில் Jwaar Bhata திரைப்படத்தில் அறிமுகமானார்.

இறுதியாக 1998 ஆம் ஆண்டு திரைப்படத்தில் தோன்றிய திலீப் குமார், 65 இற்கும் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்