நாமல் கருணாரத்ன, சமந்த வித்யாரத்ன ஆகியோர் பொலிஸில் சரண்

நாமல் கருணாரத்ன, சமந்த வித்யாரத்ன ஆகியோர் பொலிஸில் சரண்

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2021 | 10:30 am

Colombo (News 1st) அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன ஆகியோர் போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, பண்டாரவளை – பொரலந்தை பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள இவர்கள் இருவரையும் இன்று (07) வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்