திருகோணமலையில் ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு

திருகோணமலையில் ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு

திருகோணமலையில் ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2021 | 3:50 pm

Colombo (News 1st) திருகோணமலை – குச்சவெளி, ஜாயா நகர் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடலில் மீன்பிடிக்கும் போது ஏற்பட்ட வெடிச் சம்பவத்தால் இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

டைனமைட் வெடித்ததில் இளைஞர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

ஜாயா நகரிலிருந்து மீன்பிடிக்க சென்ற நான்கு பேரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குச்சவௌி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்