சரணடைந்த சமந்த வித்யாரத்னவிற்கும் நாமல் கருணாரத்னவிற்கும் பிணை

சரணடைந்த சமந்த வித்யாரத்னவிற்கும் நாமல் கருணாரத்னவிற்கும் பிணை

சரணடைந்த சமந்த வித்யாரத்னவிற்கும் நாமல் கருணாரத்னவிற்கும் பிணை

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2021 | 2:47 pm

Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன மற்றும் அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இன்று (07) காலை போகஹகும்புற பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தலா 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, தலா 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர்களும் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்