கனடாவில் முதல் தடவையாக ஆளுநர் நாயகமாக பழங்குடி பெண் நியமனம்

கனடாவில் முதல் தடவையாக ஆளுநர் நாயகமாக பழங்குடி பெண் நியமனம்

கனடாவில் முதல் தடவையாக ஆளுநர் நாயகமாக பழங்குடி பெண் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2021 | 9:46 am

Colombo (News 1st) கனேடிய வரலாற்றில், முதல் தடவையாக ஆளுநர் நாயகம் பதவிக்கு பழங்குடியின பெண்ணொருவர் பெயரிடப்பட்டுள்ளார்.

அந்நாட்டு பிரதமரினால் மேரி சைமன் (Mary Simon) என்ற பெண் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பழங்குடியினத்தவர்களின் பிள்ளைகள் கல்வி கற்ற பாடசாலை வளாகங்களிலிருந்து நூற்றுக்கணக்கான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, முன்னாள் இராஜதந்திரியும் சட்டத்தரணியுமான மேரி சைமன், ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேரி சைமன் இதற்கு முன்னர் டென்மார்க்கிற்கான தூதுவராக பணியாற்றியுள்ளார்.

மேரி சைமன்

பொதுவாக கனடாவின் உத்தியோகபூர்வ மொழிகளான கனடா மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் பரீட்சியமானவர்களே உயர் பதவிகளுக்காக நியமிக்கப்படுவர்.

எனினும், மேரி சைமனுக்கு ஆங்கிலப் புலமை மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் காலத்தில் தமக்கு பிரெஞ்ச் மொழியினை கற்க தமது முன்னோர்கள் சந்தர்ப்பம் வழங்காதமையால், பிரெஞ்ச் மொழியை தற்போது கற்க ஆரம்பித்துள்ளதாக மேரி சைமன் கூறியுள்ளார்.

கனடாவின் முன்னாளர் ஆளுநர் நாயகமான ஜெனரல் ஜூலி பேயட் ( Julie Payette), கொடுமைப்படுத்தல் குற்றச்சாட்டு காரணமாக இராஜினாமா செய்து சுமார் 06 மாதங்களின் பின்னர் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்