கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

கதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு 

by Staff Writer 07-07-2021 | 1:34 PM
Colombo (News 1st) கதிர்காமம் - சமுர்தி மாவத்தையில் நேற்று (06) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 52 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டையடுத்து தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை தேடும் நடவடிக்கையை கதிர்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். தனிப்பட்ட ரீதியிலான தகராறே இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பத்திற்கு காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்