ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸார் கோரிய தடை உத்தரவு நிராகரிப்பு

ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸார் கோரிய தடை உத்தரவு நிராகரிப்பு

ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸார் கோரிய தடை உத்தரவு நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2021 | 2:41 pm

Colombo (News 1st) அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட தரப்பினரால் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தடுக்க, தெஹிவளை பொலிஸாரால் கோரப்பட்ட தடை உத்தரவை கல்கிசை மேலதிக நீதவான் சஞ்ஜய எல்.எம். விஜேசிங்க இன்று நிராகரித்துள்ளார்.

தெஹிவளை அநாகரிக தர்மபால வீதியிலுள்ள பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான தடை உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸாரால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏதேனும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டத்தினூடாக தனிமைப்படுத்தல் விதிமுறை மீறப்பட்டால் அல்லது பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுமாயின், பொலிஸாருக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய செயற்படுமாறு மேலதிக நீதவான் இதன்போது தெஹிவளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்