பாராளுமன்றம் இன்று (06) கூடுகின்றது

பாராளுமன்றம் இன்று (06) கூடுகின்றது

by Staff Writer 06-07-2021 | 7:33 AM
Colombo (News 1st) பாராளுமன்றம் இன்று (06) காலை 10 மணிக்கு கூடவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 04 நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு காரணமாக இதற்கு முன்னர், வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் பாராளுமன்றம் கூட்டப்பட்டிருந்தது.