ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு கோப் குழு அழைப்பு 

ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு கோப் குழு அழைப்பு 

ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு கோப் குழு அழைப்பு 

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2021 | 8:09 am

Colombo (News 1st) கோப் (COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இன்று (06) ஆஜராகுமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை நாளை (07) கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை பிரதிநிதிகளை நாளை மறுதினம் (08) ஆஜராகுமாறு கோப் குழு அழைப்பு விடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு கூடவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்