ரஷ்யாவில் 28 பேருடன் பயணித்த விமானம் விபத்திற்குள்ளானது

ரஷ்யாவில் 28 பேருடன் பயணித்த விமானம் விபத்திற்குள்ளானது

ரஷ்யாவில் 28 பேருடன் பயணித்த விமானம் விபத்திற்குள்ளானது

எழுத்தாளர் Bella Dalima

06 Jul, 2021 | 6:44 pm

Colombo (News 1st) ரஷ்யாவில் 28 பேருடன் பயணித்த விமானம் விபத்திற்குள்ளாகியது.

விமானத்தில் பயணித்த எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Petropavlovsk எனும் பகுதிக்கு பயணித்த An-26 விமானம், தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பினை இழந்தது.

மலையில் மோதியே விமானம் விபத்திற்குள்ளானதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், விமான விபத்திற்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

விபத்திற்குள்ளான விமானத்தின் பாகங்கள் கடலிலும் தரையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விமானத்தில் பயணித்த 28 பேரில் 22 பேர் பயணிகள் எனவும் அதில் சிறு பிள்ளையொன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்