சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2021 | 4:53 pm

Colombo (News 1st) சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சருடன் இன்று (06) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக நிறைவுகாண் மற்றும் இடைநிலை மருத்துவ சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.

தங்களின் கோரிக்கைக்கான தீர்வு குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எழுத்து மூலமாக உறுதி வழங்கியமையால், தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.

தாதியர் சங்கத்திற்கு உறுதியளிக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நிறைவுகாண் மற்றும் இடைநிலை மருத்துவ சேவையில் ஈடுபடுவோருக்கும் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியதாகவும் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இந்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதியும் அமைச்சரவையும் இணங்கியுள்ளதாகவும், அடுத்த வாரம் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இன்றைய கலந்துரையாடலின் போது சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பிற்கு அமைய, தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தீர்மானித்ததாக நிறைவுகாண் மற்றும் இடைநிலை மருத்துவ சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்