இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2500 கிலோ கடல் அட்டைகள் தமிழகத்தில் கைப்பற்றல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2500 கிலோ கடல் அட்டைகள் தமிழகத்தில் கைப்பற்றல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2500 கிலோ கடல் அட்டைகள் தமிழகத்தில் கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2021 | 7:45 pm

Colombo (News 1st) இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 2500 கிலோ கடல் அட்டைகள் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தின் இராமேஸ்வரம் – மண்டபம் வடக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகொன்றில் கடலட்டை இருப்பதாக இந்திய கடலோரக் காவல் படைக்கு இரகசியத் தகவலொன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான நாட்டுப் படகை சோதனை செய்தபோது படகில் சுமார் 100 மூட்டைகளில் கடலட்டைகள் இருப்பது தெரியவந்தது.

பின்னர் படகிலிருந்த சுமார் 2500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்