ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி இல்லை: பொலிஸார் அறிவிப்பு

ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி இல்லை: பொலிஸார் அறிவிப்பு

ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி இல்லை: பொலிஸார் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Jul, 2021 | 5:51 pm

Colombo (News 1st) நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

சுகாதார ரீதியிலான ஆபத்தை தோற்றுவிக்கும் ஆர்ப்பாட்டங்கள எனும் தலைப்பில் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் காரணமாக COVID தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் மறு அறிவித்தல் வரை ஆர்ப்பாட்டங்களோ பொதுக்கூட்டங்களோ நடத்தப்படக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செயற்பட்டால், தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு அமைவாக பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த அறிக்கையை விடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்