உ/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்

உ/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல் 

by Staff Writer 05-07-2021 | 1:38 PM
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குரிய விண்ணப்பங்களை Online ஊடாக மாத்திரம் அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் இந்த அறிவித்தலை பின்பற்ற வேண்டும் என கல்வி அமைச்சு அறிக்கை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, இன்று (05) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk என்ற இலங்கை பரீட்சைகள் திணைக்கத்தின் இணையத்தளங்களின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் கையடக்கத் தொலைபேசி செயலியான DoE என்ற செயலியினூடாக உரியவாறு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிவைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு Online ஊடாக விண்ணப்பிப்பதற்கு உரிய பயனாளர் பெயர் (USERNAME) மற்றும் கடவுச்சொல் (PASSWORD) ஆகியன அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Online விண்ணப்பங்கள் தொடர்பான சிக்கல்கள் குறித்து 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். 011 2 784 537 / 011 2 784 208 / 011 3 188 350 / 011 3 140 314 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாகவும் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்