ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனையிலிருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்

ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனையிலிருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்

ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனையிலிருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2021 | 2:38 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரின் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனையிலிருந்து மற்றுமொரு நீதியரசர் விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனுக்கள் மீதான பரிசீலனையிலிருந்து தாம் விலகுவதாக நீதியரசர் மஹிந்த சமயவர்தன இன்று (05) அறிவித்தார்.

அதற்கமைய, ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரின் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனையிலிருந்து 04 நீதியரசர்கள் விலகியுள்ளனர்.

மனுக்கள் மீதான அடுத்தகட்ட பரிசீலனை எதிர்வரும் 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமையை ஆட்சேபித்து, ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்