முதற்கட்ட Pfizer தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

முதற்கட்ட Pfizer தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

முதற்கட்ட Pfizer தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2021 | 4:04 pm

Colombo (News 1st) அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Pfizer தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று  (05) அதிகாலை நாட்டை வந்தடைந்தது.

இந்த தொகுதியில் 26,000 தடுப்பூசிகள் அடங்குவதுடன், இம் மாதத்திற்குள் 02 இலட்சம் Pfizer தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக கிடைக்கவுள்ளன.

முதலாவதாக AstraZeneca தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியாக இதனை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், AstraZeneca முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 6 இலட்சம் பேரினால் இன்னும் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

ஜப்பானிலிருந்து AstraZeneca தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக கடந்த மாதம் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்