Colombo (News 1st) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் இன்று (04) பிற்பகல் புதிய சுகாதார வழிகாட்டல் கோவை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
அவை பின்வருமாறு:-
- பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானோர் மாத்திரமே பயணிக்க முடியும்
- மேல் மாகாணத்தில், ஆசன எண்ணிக்கையில் 30 வீதமானோர் மாத்திரம் பயணிக்க முடியும்
- தனியார் / வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கேற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்
- திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதியில்லை, எவ்வாறாயினும் மணமகன் மற்றும் மணமகள் உள்ளிட்ட 10 பேரின் பங்குபற்றலுடன் பதிவுத் திருமணத்தை நடத்த அனுமதி
- ஒருவர் உயிரிழந்தால், சடலத்தை பொறுப்பேற்று 24 மணித்தியாலங்களில் இறுதிச் சடங்குகளை முன்னெடுக்க வேண்டும், இறுதிக்கிரியைகளில் 15 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்
- திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், நீச்சல் தடாகங்கள், மதுபானசாலைகள், கெசினோ மற்றும் இரவுநேர களியாட்ட விடுதிகள், சூதாட்ட நிலையங்கள் என்பன தொடர்ந்தும் மூடப்படும்
- மசாஜ் நிலையங்களை திறக்க அனுமதி
உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.