நாட்டில் 19 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி

by Staff Writer 04-07-2021 | 1:42 PM
Colombo (News 1st) வேகமாகப் பரவும் டெல்டா வைரஸ் தொற்றுடன் நாட்டில் இதுவரை 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் வௌிநாட்டுப் பிரஜை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். தெமட்டகொடை பகுதியை சேர்ந்த ஐவர் முதன்முதலாக டெல்டா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். ஏனைய 14 பேரும் நேற்று (03) அடையாளங் காணப்பட்டுள்ளனர். தற்போது இனங்காணப்பட்ட நோயாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியோரிடம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளோரை அடையாளம் காண்பதற்காக எழுமாற்றாக PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.