LPL-இல் விளையாட 11 நாடுகளின் வீரர்கள் விருப்பம்

லங்கா பிரிமியர் லீக்கில் பங்கேற்க 11 நாடுகளின் வீரர்கள் விருப்பம்

by Staff Writer 03-07-2021 | 3:27 PM
Colombo (News 1st) இம்முறை லங்கா பிரிமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கு 11 நாடுகளின் வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடரில் விளையாடுவதற்காக பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலர் பதிவு செய்துள்ளதாகவும் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ அரங்கில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.