3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்

மூன்று மாவட்டங்களின் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

by Staff Writer 03-07-2021 | 2:46 PM
Colombo (News 1st) நாட்டின் 3 மாவட்டங்களின் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மலை கிழக்கு நாயாறு மீனவர் பகுதியும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிஹிபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் மெதியாவ கிராமமும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 3 கிராம உத்தியோகத்தர் பிரிவும் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்படுள்ளன. அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 மாவட்டங்களின் இரண்டு பொலிஸ் பிரிவுகள் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன. கேகாலை மாவட்டத்தின் கேகாலை பொலிஸ் பிரிவின் ஹெலமட கிராம உத்தியோகத்தர் பிரிவும் குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலுப்புகெதர கிராம உத்தியோகத்தர் பிரிவின் வில்கொட கிராமமும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.