ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார் யுபுன் அபேகோன்

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார் யுபுன் அபேகோன்

by Bella Dalima 03-07-2021 | 7:05 PM
Colombo (News 1st) தெற்காசிய விளையாட்டு விழாவில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்ட சாதனையைப் படைத்த யுபுன் அபேகோன், இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். அவர் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை பூர்த்தி செய்த வீரராக போட்டிகளில் பங்கேற்பார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச 100 மீட்டர் போட்டிக்கான தரப்படுத்தலில் 51 ஆவது இடத்திலுள்ள யுபுன் அபேகோன், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறும் 56 வீரர்களில் 45 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.