by Staff Writer 03-07-2021 | 2:30 PM
Colombo (News 1st) LTTE அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் தகவல்களையும் செய்திகளையும் சமூக வலைத்தளங்களில் வௌியிட்ட இளைஞர் ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி சாரதியான 24 வயதான இளைஞரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞரின் செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் மீண்டும் முறுகல் நிலையை தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளமை விசாரணைகளில் தெரியந்துள்ளது.
குழுக்களாக இணைந்து தகவல்கள் பறிமாறப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம், குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டு ஒழுங்கு சட்டத்தின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.