தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2021 | 6:52 pm

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் – மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்