தனிமைப்படுத்தல் சட்ட மீறல்: சமந்த வித்யாரத்ன உள்ளிட்ட ஐவர் தொடர்பில் பொலிஸார் விசாரணை

தனிமைப்படுத்தல் சட்ட மீறல்: சமந்த வித்யாரத்ன உள்ளிட்ட ஐவர் தொடர்பில் பொலிஸார் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2021 | 7:56 pm

Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன உள்ளிட்ட ஐவர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பண்டாரவளை, பொரலந்தை பிரதேசத்தில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொரலந்தையில் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெலிமடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலும் சிலரை கைது செய்வதற்கு பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு தேவையில்லையென இதன்போது நீதிமன்றம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்