by Staff Writer 03-07-2021 | 2:13 PM
Colombo (News 1st) மிகவும் வேகமாக பரவும் டெல்டா வைரஸானது இதுவரை தடுப்பூசி ஏற்றாதோருக்கும் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் பாரிய அச்சுறுத்தலானது என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார்.
கணிசமான மக்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கலாநிதி சந்திம ஜீவந்தர தமது ட்விட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
வைரஸ் தொடர்பிலான அச்சுறுத்தல் இன்னும் குறைவடையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா பிறழ்வு குறித்த உயிரணு பகுப்பாய்வு அறிக்கை இன்று சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.