சில ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

சில ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

சில ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2021 | 8:21 pm

Colombo (News 1st) சில ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை படிப்படியாக மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி, குளிரூட்டி, வாசனைத் திரவியம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதனூடாக வௌிநாட்டு இருப்பை பலப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவிடம் வினவியபோது, இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்