கனடாவில் வரலாறு காணாத வெப்பம்: 130-இற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவல்

கனடாவில் வரலாறு காணாத வெப்பம்: 130-இற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவல்

கனடாவில் வரலாறு காணாத வெப்பம்: 130-இற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவல்

எழுத்தாளர் Bella Dalima

03 Jul, 2021 | 3:59 pm

Colombo (News 1st) கனடாவில் நிலவும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக 130-இற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது.

கனடாவின் மேற்கு பிராந்தியத்தில் நேற்று ஏற்பட்ட மின்னலால் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வரலாறு காணாத அதிகரித்த வெப்பத்துடனான வானிலை நிலவுகிறது.

இதனால் அவசர சேவைகளுக்கு உதவியளிப்பதற்கு இராணுவ விமானங்களை அனுப்பவுள்ளதாக கனடாவின் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பம் முதல் Lytton நகரிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு 49.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதேவேளை, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள லய்டொன் பகுதியில் பரவிய காட்டுத்தீ காரணமாக குடியிருப்பாளர்கள் தங்கள் உடைமைகள் எதுவும் இன்றி வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் அதிகரித்துள்ள வெப்பத்துடனான வானிலையினால் இதுவரை 500-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்