D.A. ராஜபக்ஸ அருங்காட்சியக வழக்கு:6 பேர் விடுதலை

D. A. ராஜபக்ஸ அருங்காட்சியக வழக்கு: பிரதிவாதிகள் அறுவரும் விடுதலை

by Staff Writer 02-07-2021 | 2:44 PM
Colombo (News 1st) D. A. ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாண வழக்கின் பிரதிவாதிகள் 6 பேரையும் விடுதலை செய்ய கொழும்பு முதலாவது நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொடவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகியோர் முன்னிலையில் வழக்கு இன்று தீர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தங்காலை - வீரகெட்டிய, மெதமுலன D. A. ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணத்திற்காக காணி மறுசீரமைப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 34 மில்லியன் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.