by Staff Writer 02-07-2021 | 8:28 PM
Colombo (News 1st) மேலும் ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற அனைத்து Sinopharm தடுப்பூசிகளும் தற்போது பாவிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஜூலை முதலாம் திகதியளவில் 18,49,565 பேருக்கு Sinopharm தடுப்பூசியின் முதலாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
நேற்று மாத்திரம், 1,65,000 பேருக்கு Sinopharm தடுப்பூசியின் முதலாம் டோஸ் ஏற்றப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
இதனிடையே, 1,14,795 பேருக்கு Sputnik V தடுப்பூசியின் முதலாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன், இதன் இரண்டாம் டோஸ் 14 ,427 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.
நேற்று AstraZeneca தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் 3672 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 3,81,979 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.