வட மாகாண மாணவர்களின் கல்விக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி முறைப்பாடு

வட மாகாண மாணவர்களின் கல்விக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி முறைப்பாடு

வட மாகாண மாணவர்களின் கல்விக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2021 | 6:46 pm

Colombo (News 1st) வடக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவர்களின் கல்விக்கான சம வாய்ப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இன்று முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டாளர்களாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் , உப தலைவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முறைப்பாட்டுக் கடிதத்தின் பிரதிகள் கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் வட மாகாண செயலாளர், வட மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இணைய வகுப்புகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மாற்றீடாக எதனையும் கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை என்பதைக் கண்டித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீபன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்