பஸ்ஸில் பயணித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகம்: சாரதியும் நடத்துனரும் கைது

பஸ்ஸில் பயணித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகம்: சாரதியும் நடத்துனரும் கைது

பஸ்ஸில் பயணித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகம்: சாரதியும் நடத்துனரும் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2021 | 2:32 pm

Colombo (News 1s) தனியார் பஸ் ஒன்றில் பயணித்த யுவதி ஒருவரை பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

கெப்பத்திகொல்லாவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொது போக்குவரத்தில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, சேவையில் ஈடுபடும் சாரதி மற்றும் நடத்துனரின் பொறுப்பு எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்