இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளுக்கு பயணிக்க ஐக்கிய அரபு இராச்சியம் தடை

இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளுக்கு பயணிக்க ஐக்கிய அரபு இராச்சியம் தடை

இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளுக்கு பயணிக்க ஐக்கிய அரபு இராச்சியம் தடை

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2021 | 3:41 pm

Colombo (News 1st) இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு பயணிக்க ஐக்கிய அரபு இராச்சியம், தமது பிரஜைகளுக்கு தடை விதித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமிபியா, சாம்பியா, காங்கோ, உகண்டா, சியரா லியோன், லிபேரியா, தென் ஆபிரிக்கா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கான பயணங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

Etihad Airways எதிர்வரும் ஜூலை 21 வரை விமானப் பயணங்களுக்கான தடையை நீடித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பயணிக்கும் விமானங்களுக்கும் ஏப்ரல் 21 ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பிறழ்வு பரவுவதன் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்