by Staff Writer 01-07-2021 | 9:07 AM
Colombo (News 1st) சிறு போகத்தில் நெற்கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (01) ஆரம்பமாகவுள்ளன.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சகல நெல் விநியோக சபைகளின் ஆலைகளின் ஊடாக விவசாயிகளிடம் நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
இதற்காக 19 மாவட்டங்களில் களஞ்சியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
சிறு போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஆரம்பமாகவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் துமிந்த பிரியதர்ஷன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராம் 50 ரூபாவுக்கும் சம்பா நெல் ஒரு கிலோகிராம் 52 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
ஈரப்பதம் கொண்ட நெல் ஒரு கிலோகிராமை அதிகபட்ச விலையாக 44 ரூபாவுக்கு அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது.