மருத்துவ சாதனங்களை கையளித்துள்ள யூனியன் அஷ்யூரன்

கொவிட்-19 தவிர்ப்பிற்கான போராட்டத்திற்கு உதவும் வகையில் அத்தியாவசிய மருத்துவ சாதனங்களை கையளித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் 

by Staff Writer 01-07-2021 | 7:59 PM
Colombo (News 1st) கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் நான்கு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசியமான மருத்துவ சாதனங்களை வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி முன்வந்திருந்தது. நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் கொள்ளளவுத் திறனை அதிகரித்துக் கொள்வதற்கான பங்களிப்பாக இந்த அன்பளிப்பு அமைந்திருந்தது. இலங்கையில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுக்கு 257,225 க்கும் அதிகமானவர்கள் இலக்காகியுள்ளதுடன், 3,030 க்கும் அதிகமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
கொவிட் தொற்றுப் பரவல் எல்லைகளை அறியாது. இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னிலையில் நின்று பணியாற்றுவோருக்கும் மக்களுக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் உதவ வேண்டியது எமது கடமையாகும். இவ்வாறான நெருக்கடியான காலப்பகுதியில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உதவுவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்
என்றார். இவ்வாறு வழங்கப்பட்ட மருத்துவ சாதனங்களில் உயர்அழுத்தத்திறன் கொண்ட ஒட்சிசன் இயந்திரங்கள் (highflow oxygen machines), அவசர ட்ரொலிகள் (emergency trolleys), வீடியோ லெரிங்கோஸ்கோப்ஸ் (video laryngoscopes) மற்றும் வென்டிலேற்றர்கள் (ventilators) போன்றன அடங்கியிருந்ததுடன், இவை மதவாச்சி ஆதார வைத்தியசாலை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலை, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுக்கு ஜுன் மாதம் 24, 25 மற்றும் 30 ஆம் திகதிகளில் கையளிக்கப்பட்டன. கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18.4 பில்லியனைத் தன்வசம் கொண்டுள்ளதுடன், 2021 மார்ச் மாதத்தில் ஆயுள் நிதியமாக ரூ. 43.3 பில்லியனையும் கொண்டிருந்தது. 2021 மார்ச் மாதத்தில் மூலதன போதுமை விகிதம் (CAR) 306% ஆகவும் காணப்பட்டது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. 76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குவதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப பணியாற்றிய வண்ணமுள்ளது.