Colombo (News 1st) மூன்று மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று (01) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில், யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கிராம சேவகர் பிரிவின் கல்லித்தெரு பகுதி மற்றும் கல்வன்தால்வு பகுதி ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவின் டன்சினன் கிராம சேவகர் பிரிவின் மத்திய பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் கண்டி பொலிஸ் பிரிவின் கீழுள்ள சுதுஹும்பல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் வெலமெத பாரகம பகுதி முடக்கப்பட்டுள்ளது.
