புத்தளம் நகர சபை தலைவராக M.S.M. ரபீக் பொறுப்பேற்பு

புத்தளம் நகர சபை தலைவராக M.S.M. ரபீக் பொறுப்பேற்பு

புத்தளம் நகர சபை தலைவராக M.S.M. ரபீக் பொறுப்பேற்பு

எழுத்தாளர் Staff Writer

01 Jul, 2021 | 5:56 pm

Colombo (News 1st) புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த M.S.M. ரபீக் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

புத்தளம் நகர சபையின் புதிய தலைவர் பதவிக்கு சபையின் பதில் தலைவர் R.A.S.புஷ்பகுமார மற்றும் M.S.M. ரபீக் ஆகியோர் போட்டியிடவிருந்தனர்.

தலைவரைத் தெரிவு செய்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்த நிலையில், போட்டியிலிருந்து விலகுவதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் R.A.S.புஷ்பகுமார அறிவித்தார்.

இதனையடுத்து, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் M.S.M. ரபீக் புதிய தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்