by Staff Writer 30-06-2021 | 7:31 PM
Colombo (News 1st) இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான அரசாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கம் இருக்கும் என மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, முகாம்களில் தங்கியுள்ள அகதிகளை விருப்பமின்றி இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படாது என அவர் கூறியதாக தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
முகாம்களில் தங்கியுள்ளவர்களின் குடியுரிமை உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் கூறியுள்ளார்.
இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கான அடுக்குமாடி வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.