கால்பந்தாட்ட சம்மேளன தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு

by Staff Writer 30-06-2021 | 7:14 PM
Colombo (News 1st) இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜஸ்வர் உமருக்கு ஆதரவாக 96 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட மணில் பெர்னாண்டோவிற்கு ஆதரவாக 90 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு புதிய நிர்வாக அதிகாரிகளை தெரிவு செய்யும் தேர்தல் மற்றும் வருடாந்த பொதுக்கூட்டம் என்பன காலி, கண்டி, பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகியது. இரகசிய வாக்கெடுப்பில் 62 கழகங்களை சேர்ந்த 186 பேர் கலந்துகொண்டனர். இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த ஜஸ்வர் உமர், பொதுச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.