குற்றச்செயல்களுடன் தொடர்பு: மத்தா எனப்படும் மதுஷங்க சில்வா கைக்குண்டுடன் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்பு: மத்தா எனப்படும் மதுஷங்க சில்வா கைக்குண்டுடன் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்பு: மத்தா எனப்படும் மதுஷங்க சில்வா கைக்குண்டுடன் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2021 | 4:03 pm

Colombo (News 1st) பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘மத்தா’ என்றழைக்கப்படும் மதுஷங்க சில்வா கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 வயதான குறித்த நபர் கல்கிசை – கல்தேமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயிலுள்ள ‘அஞ்சு’ என்றழைக்கப்படும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உதவியாளராக இவர் செயற்படுகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மொரட்டுமுல்லயில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுடன் இவர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, கம்பஹா – வீதியவத்தயில் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபரால் புதைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கியின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மினுவாங்கொடை – உன்னராவயில் துப்பாக்கியின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

36 வயதான சந்தேகநபர் பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்