இரண்டரை வயது குழந்தை குழிக்குள் வீழ்ந்து உயிரிழப்பு 

இரண்டரை வயது குழந்தை குழிக்குள் வீழ்ந்து உயிரிழப்பு 

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2021 | 1:10 pm

Colombo (News 1st) மஸ்கெலியா – பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் ஆண் குழந்தை ஒன்று குழிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

பிரவுன்ஸ்வீக் – 50 ஏக்கர் பகுதியை சேர்ந்த இரண்டரை வயதான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினார்.

வீட்டிலிருந்த குழந்தை காணாமல் போனதையடுத்து, நேற்று (29) மாலை பெற்றோர்கள் குழந்தையைத் தேடியுள்ளனர்.

இதன்போது வீட்டுக்கருகிலுள்ள மாட்டுத் தொழுவத்திலிருந்து வௌியேறும் கழிவுகளுக்காக வெட்டப்பட்டிருந்த குழிக்குள் வீழ்ந்திருந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது குழந்தை உயிரிழந்துள்ளது.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (30) முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்