40 வீத பிளாஸ்டிக் கழிவுகளே நாட்டில் கரையொதுங்கின

X-Press Pearl கப்பலின் 40 வீத பிளாஸ்டிக் கழிவுகளே நாட்டில் கரையொதுங்கின

by Staff Writer 29-06-2021 | 2:59 PM
Colombo (News 1st) MV X-Press Pearl கப்பலிலிருந்து 40 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் மாத்திரமே கரையொதுங்கியுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. ஏனைய 60 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பில் உரிய தரவுகள் கிடைக்கவில்லை என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். கரையொதுங்கிய 1,034 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் 44 கொள்கலன்களில் வத்தளை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார். கடலில் ஒரே தடவையில் பாரியளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த முதலாவது சந்தர்ப்பமாக X-Press Pearl கப்பலின் தீ விபத்து பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.